முஸ்லிம்களின் ஜனாஸாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் - இம்ரான்

Published By: Digital Desk 4

08 Jan, 2021 | 07:25 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யலாம் என தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள விசேட வைத்திய குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும். மாறாக தகனம் மாத்திரம் என சுகாதார அமைச்சரின் கூற்று மனிதாபிமனத்துக்கு விரோதமான தீர்மானமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

Articles Tagged Under: இம்ரான் மஹ்ரூப் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் வியாழக்கழமை இடம்பெற்ற துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கீழான கட்டளைகள், உற்பத்தி வரி சட்டத்தின் கீழான கட்டளைகள், நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் மற்றும் புலமைச்சொத்து திருத்த சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட்டில் மரணிப்பவர்களின் இறுதுக்கிரியை தொடர்பில் அரசாங்கம் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றது. நாளுக்கு நாள் வேறுபட்ட தகவல்களை வெளியிடுகின்றனர்.

அடக்கம் செய்ய இடம் தேடுவதாக தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை மாலைதீவுக்கு கொண்டு செல்ல அரசாங்கம் கதைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு மாறுபட்ட கருத்துக்களே தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வைத்திய நிபுணர்களின் பரிந்துரைக்கமையவே அரசாங்கம் தீர்மானிக்கும் என தெரிவித்து வந்தது. தற்போது விசேட வைத்தியர்குழு அடக்கம் செய்யலாம் என தெரிவித்து பரிந்துரை செய்திருக்கின்றது.

ஆனால் அரசாங்கத்தின் சில அமைச்சர்கள், இதுதொடர்பில் அரசாங்கமே இறுதி முடிவு எடுக்கும், சுகாதாரத் துறை அல்ல என தெரிவித்திருக்கின்றனர். 

அரசாங்கத்தின் இந்த மாறுபட்ட நிலைப்பாட்டில் இருந்து விளங்கக்கிடைப்பது, யார் என்ன தெரிவித்தலும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது என்பதாகும்.

அதனால் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர்.

இனவாதத்தை போஷிக்கும் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த இவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகின்றனர் என்பதை மக்களுக்கு அறிவிக்கவேண்டும். 

எனவே கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யலாம் என தெரிவித்து பரிந்துரை செய்திருக்கும் விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கம் மீண்டும் பரிசீலனை செய்து, மனிதாபிமான ரீதியில் தீர்மானம் எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30