தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு உணவு தட்டுப்பாடு: அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையென மக்கள் விசனம்

Published By: J.G.Stephan

07 Jan, 2021 | 12:33 PM
image

வவுனியா பட்டாணிச்சூரில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அக்கிராமம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  அங்கு வசிக்கும் மக்களுக்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனமடைந்துள்ளதாக, வவுனியா நகர சபையின் உறுப்பினர்களான அப்துல் பாரி மற்றும் லரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 


தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது கிராமத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், கிராமம்  திடீரென தனிமைப்படுத்தப்பட்டது. 

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அங்குள்ள 900 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 4,500 இற்கும் மேற்பட்டவர்கள் தற்போது உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாதுள்ளனர். 

பிரதேச செயலக அதிகாரிகள் யாரும், எமது மக்களை  பார்வையிடவில்லை. அவர்களுக்கான தேவைகள் குறித்தும் ஆராயவுமில்லை. குழந்தைகளுக்கு பால் மா மற்றும் வயோதிபர்களுக்கான உணவு, மருத்துவம் என்பவற்றிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

எனவே தனிமைப்படுத்தப்பட்ட மக்களை மனிதாபிமானத்தோடு நோக்குங்கள் என அவர்கள் மேலும், தெரிவித்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27