தமிழர்களுக்கான சம உரிமையை இலங்கைக்கு மீண்டும் வலியுறுத்தியது இந்தியா - முழு விபரம்

Published By: Digital Desk 4

07 Jan, 2021 | 07:33 AM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் தனிப்பட்ட ஆர்வத்தினால் மாத்திரமே சமத்துவம் , நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை ஒன்றுபட்ட இலங்கைக்குள் பூர்த்தி செய்ய முடியும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட அர்த்தமுள்ள அதிகார பகிர்வு தொடர்பாக அரசாங்கத்தினால் ஆற்றப்பட்ட கடமைகளுக்கு இது சமமாகப் பொறுந்தும்.

இதன் விளைவாக இலங்கையின் முன்னேற்றமும் செழிப்பும் நிச்சயமாக மேம்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் தெரிவித்தார்.

இந்துமா சமுத்திரத்தின் கடல் சார் பாதுகாப்புக்களை உறுதி செய்வதில் இரு நாடுகளும் ஆர்வம் கொண்டுள்ளன.

இது தொடர்பான ஒத்துழைப்பின் நீண்ட வரலாறு எம்மிடம் காணப்படுகிறது. இந்த ஒத்துழைப்புக்கள் எதிர்காலத்திலும் தொடர்ந்து மேம்படும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

 இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோர் புதன்கிழமை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,    

2021 ஆம் ஆண்டு இலங்கை மக்களனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். மீண்டும் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டமை மகிழ்ச்சியளிக்கிறது.

தொழிமுறையடிப்படையிலும் தனிப்பட்ட ரீதியிலும் இந்தியா - இலங்கைக்கிடையில் காணப்படுகின்ற உறவுகள் மகிழ்ச்சிகுரியது.

இந்த விஜயத்திற்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் கொவிட் அச்சுறுத்தலால் முன்னரே இலங்கைக்கு வர முடியாமல் போனது.

எனினும் 2021 இல் இந்தியாவிற்கு அயல் நாடான இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளதால் மகிழ்ச்சியடைகின்றேன்.

கொவிட் தொற்றின் காரணமாக இரு நாடுகளும் அச்சுறுத்தலானதும் பொதுவானதுமான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் எனது இந்த விஜயம் அமைந்துள்ளது.

எனினும் மேலும் நெருக்கமான செயற்படுவதற்கு கொவிட் தொற்றானது எமக்கு வாய்ப்பளித்திருக்கிறது என்று எண்ணுகின்றேன்.

'அயல் நாட்டுக்கு முதலிடம்' என்ற இந்தியாவின் கொள்கைக்கு அமைய உரிய நேரத்தில் மருத்துவ உதவிகள் மூலம் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை முன்னெடுத்த முயற்சிகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

அதேவேளை கொவிட் காரணமாக இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்களை நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தியாவிலிருந்து கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள இலங்கை ஆர்வம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். கொவிட் தொற்றினாலும் எமது இரு தரப்பு ஒத்துழைப்பை மறுக்க முடியவில்லை என்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த ஆண்டில் உயர்மட்ட தொடர்புகள் பராமரிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையில் நடைபெற்ற மெய்நிகர் இருதரப்பு உச்சி மாநாடு முக்கியத்துவமுடையதாகக் காணப்பட்டது.

ஜனாதிபதியுடனான சந்திப்பு

நேற்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது இரு நாடுகளினதும் கூட்டு முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பிரதமர் , ஏனைய பிரதிநிதிகளுடனான சந்திப்பு

இன்று மாலை  நான் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளேன். அத்தோடு ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ப ஏனைய முக்கிய அரசியல் தலைவர்களுடனும் சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதே போன்று வணிக அமைப்புக்களுடன் சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன. 

இவ் அனைவருடனான சந்திப்பின் போதும் பரஸ்பர நம்பிக்கை , கௌரவம், உணர்வுகள், ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவதற்கு நம்பகமான பங்காளியாக இந்தியா காணப்படும் என்பது தெளிவுபடுத்தப்படும்.

கொவிட் தடுப்பூசி

தற்போது இலங்கை இந்தியா ஆகிய இரு நாடுகளும் கொவிட் தொற்றிலிருந்து மீள்வதற்கான சவாலுக்கு முகங்கொடுத்துள்ளன. இது ஒரு பொது சுகாதார பிரச்சினை மாத்திரமின்றி பொருளாதார நெருக்கடியுமாகும். எனினும் இந்தியாவைப் பொறுத்தவரையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள அதே வேளை , தடுப்பூசியை வழங்குவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

பொருளாதாரம்

இந்தியாவின் பொருளாதாரமும் எதிர்வரும் சில மாதங்களில் மீண்டும் வலுவாக்கப்படுவதற்காக அறிகுறிகள் தோன்றியுள்ளன. அடுத்த காலாண்டில் இந்நிலைமை பூரணமடையும் என்று நம்புகின்றோம். இந்த முன்னேற்றங்கள் இலங்கைக்கும் சாதகமான நிலைமையை ஏற்படுத்தும். அதே நேரம் நிதி மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிட்டளவு சவால்கள் காணப்படுகின்றன. எனது விஜயமானது அந்த சவால்களை இலகுவாக்குவதை இலக்காகக் கொண்டது.

இவ்வாறான வெளிப்படையான ஒத்துழைப்புக்களைக் கொண்ட இரு அயல் நாடுகளின் ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவது அத்தியாவசியமானது. இதன் மூலம் சில துரிதமான நிவாரணங்களும் வழங்கப்படக் கூடும். 

அவற்றில் உட்கட்டமைப்பு , எரிசக்தி, இணைப்புக்கள் உள்ளிட்ட பல உள்ளடங்குகின்றன. இவற்றின் ஆரம்ப கால நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதார மீட்சியை துரிதப்படுத்தும். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் இந்தியா ஆர்வமாகவுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் மருந்து உற்பத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் எமது சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

சமூக மற்றும் மனிதவள விடயங்களில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளில் இந்தியா ஒரு பங்குதாரராகவுள்ளது. வீட்டுத்திட்டங்கள் , அம்புலன்ஸ் சேவைகள், பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட பல விடயங்களினூடாகவும் இலங்கை மக்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எமது கடனுதவிகள் இயல்பு நிலைமையை உருவாக்க உதவுகின்றன. 

தொழிற்பயிற்சி நிலையங்களை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை எம்முடன் இணைந்துள்ளது. எதிர்கால நடவடிக்கைகளிலும் இயல்பாகவே இந்த விடயங்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.

தமிழ் மக்களுக்கான சமத்துவம்

பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிப்பதால் இலங்கையுடனான ஒற்றுமை , ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா உறுதியளித்துள்ளது. இன நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அரசியல் கண்ணோட்டத்திற்கு அமைய இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கும் தொடர்ந்தும் இந்தியாவின் ஆதாரவு காணப்படுகிறது.

இலங்கையின் தனிப்பட்ட ஆர்வத்தினால் மாத்திரமே சமத்துவம் , நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை ஒன்றுபட்ட இலங்கைக்குள் பூர்த்தி செய்ய முடியும். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட அர்த்தமுள்ள அதிகார பகிர்வு தொடர்பாக அரசாங்கத்தினால் ஆற்றப்பட்ட கடமைகளுக்கு இது சமமாகப் பொறுந்தும். இதன் விளைவாக இலங்கையின் முன்னேற்றமும் செழிப்பும் நிச்சயமாக மேம்படும்.

கடல் சார் விவகாரம்

இந்துமா சமுத்திரத்தின் கடல் சார் பாதுகாப்புக்களை உறுதி செய்வதில் இரு நாடுகளும் ஆர்வம் கொண்டுள்ளன. இது தொடர்பான ஒத்துழைப்பின் நீண்ட வரலாறு எம்மிடம் காணப்படுகிறது. அதற்கமையவே அவசர கால நிலைமைகளின் போது இந்தியா முதலில் உதவியுள்ளது. 

இந்த ஒத்துழைப்புக்கள் எதிர்காலத்திலும் தொடர்ந்து மேம்படும் என்று நம்புகின்றேன். அதிகரித்து வரும் கடல் சார் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இலங்கையின் திறன்களை மேம்படுத்த நாம் தயாராகவுள்ளோம்.

மீன்பிடித்துறை

மீன்வளத்தை உள்ளடக்கிய விடயங்களில் இந்தியா - இலங்கை கூட்டு செயற்குழு கூடி அதன் ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அண்மையில் இந்த குழு கூடி நிலுவையிலுள்ள இந்த விவகாரங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் மேலும் அவதானம் செலுத்துவதற்காக இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாவுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு வருகை தருவதற்கான வாய்ப்பிற்காகவும் கலந்துரையாடல்களுக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10