நிபுணர் குழுவின் பரிந்துரை கிடைத்தவுடன் கொவிட் தடுப்பூசிகளை கொண்டு வருவோம்: சபையில் பவித்ரா

Published By: J.G.Stephan

06 Jan, 2021 | 04:18 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர முன்னர் அதன் தரம், அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தெல்லாம் ஆராய வேண்டியுள்ளதுடன், அது குறித்து ஆராய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் குறித்து ஆராயும் நிபுணர் குழுவின்  பரிந்துரைகள் எமக்கு கிடைக்கப்பெற்றவுடன் குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சபையில் தெரிவித்தார்.  

மேலும், கொவிட் -19 வைரஸ் பரவலை நாட்டில் கட்டுப்படுத்தும் விதமாக அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதில் பிரதான கடமைகளை சுகாதார அமைச்சும், பாதுகாப்பு துறையினர் மற்றும் அரச புலனாய்வுதுறையின் முழுமையான ஒத்துழைப்புடனும் தனியார் அமைப்புகள், சிவில் அமைப்புகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டு வெற்றிகரமாக இவற்றை கையாண்டு வருகின்றோம். சகல மாவட்டங்களிலும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதுடன், சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழையும் வாய்ப்புகள் உள்ள சகல இடங்களையும் பலப்படுத்துவதுடன் அவ்வாறான பகுதிகளிலும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதும், வெளிநாடுகளில் இருந்து வரும் சகலருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பதும், அவர்களை 14 நாட்கள் தடுத்து வைத்திருந்து மீண்டும் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பது என்ற காரணிகள் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

அதேபோல் இலங்கைக்குள் கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுகொடுக்க ஏற்றுகொள்ளப்பட்ட வழிமுறைகளை கையாள்கிறோம். அதற்கமைய சுகாதார பணிப்பாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தொற்றுநோய் தடுப்பு பிரிவினரை  உள்ளடக்கிய நிபுணர் குழு இந்த விடயங்களை கையாண்டு வருகின்றனர்.

 இப்போது வரையிலும் குறித்த நிபுணர் குழு உலகில் இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அதேபோல் தடுப்பூசியை கொண்டுவந்தால் அதனை களஞ்சியப்படுத்தும் முறைமை மற்றும் அதற்கான செலவுகள் குறித்தும் உப குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றது.

கொவெக்ஸ் உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள நாடுகளில் நாமும் உள்ளதனால் இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் தொற்றுநோய் குறித்து ஆராயும் நிபுணர் குழுவின் மூலமாக முறையான தடுப்பூசி குறித்த பரிந்துரைகள் எமக்கு கிடைக்கப்பெற்றவுடன் குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். கொவெக்ஸ் வேலைத்திட்டத்திற்கு அமைய இந்த ஆண்டு நடுப்பகுதியில் 20 வீதமான மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உடன்படிக்கைகள், சட்ட திட்டங்கள் குறித்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து உரிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக ஜனாதிபதி தனது பிரதிநிதியாக லலித் வீரதுங்க அவர்களை நியமித்துள்ளார். அவர் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22