ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் முடிந்தவுடன் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் - சரத் வீரசேகர

Published By: Digital Desk 3

06 Jan, 2021 | 04:59 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல, எமது ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மூலமாக தாக்குதல் குறித்து பல உண்மைகள் வெளிவந்துள்ளதாக சபையில் தெரிவித்த அமைச்சர் சரத் வீரசேகர, ஜனவரி 31 ஆம் திகதியுடன்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் முடிந்தவுடன் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தில் ஆளும் கட்சி எம்.பியான நளின் பெர்னாண்டோ ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணையின் தற்போதைய நிலைமைகள் குறித்து, ஜெனீவா பிரேரணை குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் சரத் வீரசேகர,

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எமக்கு எதிராக எட்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது, இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களுமே பொய்யானது, அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து எந்தவித ஆய்வும் செய்யாது பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கினார்.

உலகில் எந்தவொரு நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சரும் தமது இராணுவம் போர் குற்றவாளிகள் என்பதை ஏற்றுக்கொண்டதும் இல்லை, இவ்வாறான பிரேரணை ஒன்றிற்கு இணை அனுசரணை வழங்கியதும் இல்லை, நல்லாட்சி அரசாங்கத்தில் மட்டுமே இது நடந்தது, எவ்வாறு இருப்பினும் இந்த சகல விடயங்களையும் நாம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா கூட்டத் தொடரில் நிராகரித்து பதில் கூறுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31