13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தும் 21 ஆவது திருத்தத்தினை நிறைவேற்றுங்கள் புதிய அரசியலமைப்புக்கான யோசனையில் தமிழர் மகா சபை

Published By: Digital Desk 3

06 Jan, 2021 | 01:08 PM
image

(ஆர்.ராம்)

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு முன்னதாக தற்போதுள்ள அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தச்சட்டத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை சிக்கல்கள் இன்றி பயன்படுத்தும் வகையில் 21 ஆவது திருத்தச்சட்டமொன்றை மேற்கொள்வதே பொருத்தமானது என்று அகில இலங்கை தமிழர் மகாசபை வலியுறுத்தியுள்ளது.

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள முன்மொழிவுகளில் ‘மேலதிக யோசனைகள்’ என்ற வகையறைக்குள் மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது நீண்ட பணியாகும். அதனை முன்னெடுப்பதற்குரிய அக, புறச் சூழல்களை கருத்திற்கொண்டே இவ்வாறு 21 ஆவது திருத்தத்தினை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவதாக தமிழர் மாகா சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தமிழர் மாகா சபை அனுப்பி வைத்துள்ள முன்மொழிவில், இலங்கையானது பிளவுபடாத, பிரிக்கப்படாத நிலையில் ஐந்து பிராந்தியங்களாக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டு மக்களின் ஆணை பெற்ற தலைவராக பிரதமரே இருப்பர் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியானவர், பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படுபவராகவும் உப ஜனாதிபதியானவர் பெரும்பான்மை இனத்தை அல்லாதொருவராகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கலப்புத்தேர்தல் முறை முன்மொழியப்பட்டுள்ளதோடு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக இருக்கவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டாவது சபை அல்லது செனட் சபை என்ற கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதோடு,அந்த சபைக்கு உப ஜனாதிபதியே தலைமை தாங்குவார் என்றும் குறித்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐந்து பிராந்தியங்கள் காணப்படுமாயின் தலா ஒன்பது உறுப்பினர்கள் வீதமும் தற்போதுள்ளவாறே ஒன்பது மாகாணங்கள் காணப்படுமாயின் தலா ஐவர் வீதமும் மாகாணங்களிலிருந்து செனட் சபைக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள். இதனைவிடவும் துறைசார் நிபுணர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்றும் முக்கியமான சட்டங்கள் அனைத்தும் செனட் சபையிலும், பாராளுமன்றிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதனைவிடவும், மொழி, மாதம், தேசியக்கொடி உள்ளிட்ட மாகாண சபை அதிகாரங்கள் சம்பந்தமாக பல்வேறு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44