நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லபுக்கலை தோட்டத்தில் நேற்று வீடொன்றில் இருந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சடலம் உறவினர்களால் மீட்கப்பட்டது. 

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 23 வயது மதிக்கதக்க வசந்தராஜ் என தெரியவந்துள்ளது. 

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருவதோடு, இதற்கான காரணம் இதுவரையும் தெரியவில்லை. 

இளைஞனின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

உயிரிழந்த இளைஞன் திருமணம் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.