சிறைச்சாலை கொத்தணியில் 4 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள்

Published By: Digital Desk 4

05 Jan, 2021 | 08:55 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில்  கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 45 000 ஐ கடந்துள்ளது. எனினும் 38 000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை மாலை 7 மணி வரை 224 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இவர்களில் 38 262 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 6989 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

நேற்று திங்கட்கிழமை காலை முகத்துவாரம் பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் இன்று செவ்வாய்கிழமை காலை முதல் முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் புனித அன்றூஸ் வீதி மற்றும் புனித அன்றூஸ் மேல் மற்றும் கீழ் பிரிவு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதே வேளை தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசமாக பெயரிடப்பட்டிருந்த அவிசாவளை பொலிஸ் பிரிவு நேற்று திங்கட்கிழமை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று பதிவான மரணங்கள்

நேற்று திங்கட்கிழமை இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் கடந்த 02 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட சுவாச நோய்த்தொற்று மற்றும் நுரையீரல் நோய்த்தொற்றின் சிக்கலான நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவர் வீட்டில் கடந்த முதலாம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா மற்றும் கால்-கை வலிப்பு நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை கொத்தணியில் 4000 தொற்றாளர்கள்

இன்று செவ்வாய்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் சிறைச்சாலைகளில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 19 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய இன்று மாலை வரை 4122 கொவிட் தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் இனங்காணப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் 867 தொற்றாளர்களும் மெகசின் சிறைச்சாலையில் 839 தொற்றாளர்களும் மஹர சிறைச்சாலையில் 798 தொற்றாளர்களும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 417 தொற்றாளர்களும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் 334 தொற்றாளர்களும் இவ்வாறு அடையாளங்காணப்பட்டுள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01