கிழக்கு மாகாணத்தில் 38 புதிய கொரோனா தொற்றாளர்கள் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் லதாகரன் 

Published By: Digital Desk 4

05 Jan, 2021 | 08:52 PM
image

கிழக்கு மாகாணத்தில் 38 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (05) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் 1323 நபர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில் 802 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதாகவும் 539 நபர்கள் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஏழு மரணங்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் 173  நபர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 264 பேர் இனங் காணப்பட்டுள்ளதாகவும், அம்பாறை பிராந்தியத்தில் 34 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளதாகவும், அதிகளவில் கல்முனைப் பிராந்தியத்தில் 752 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமை படுத்தப்பட்டுள்ளதாகும், மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் கல்முனை நகர் பகுதிகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் சுகாதார  திணைக்கள விடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறும், வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு, அல்லது காவல் துறையினருக்கு அறிவிக்குமாறும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04