ஆயிரம் ரூபாவை அடிப்படை சம்பளமாக வழங்குவதில் ஏன் தாமதம் : எதிர்க்கட்சியின் மலையக பிரதிநிதிகள் சபையில் கேள்வி

Published By: Digital Desk 4

05 Jan, 2021 | 06:02 PM
image

( ஆர்.யசி, எம்.ஆர்.எம் வசீம்)

தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்குவதாக கூறிய ஆயிரம் ரூபாய் நாளந்த கொடுப்பனவுகளை ஏன் இன்னமும் கொடுக்க முடியாதுள்ளது. பிரதமர் மற்றும் அரசாங்கம் கொடுத்த வாக்குறிதிகளை ஏன் இன்னமும் நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது என மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பினர்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, தொழில் அமைச்சின் கீழ் வரும் கடை, அலுவலக ஊழியர், பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல், குறைந்தபட்ச வேதனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர்கள் இந்த கேள்வியை எழுப்பினர்,

இது குறித்து எம். உதயகுமார் எம்.பி கூறுகையில்,

2021 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை முன்வைத்த பிரதமர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளந்த கொடுப்பனவுகளாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தமது யோசனையை நிராகரிக்கும் பட்சத்தில் குறித்த கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் கூறினார். 

ஆனால் கம்பனிகள் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் தென்படவில்லை. கம்பனிகள் அரசாங்கத்திற்கு நேரடியாக சவால் விடும் விதமாக அமைந்துள்ளது. 

தற்போதுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் நாளந்த சம்பளம் 700 ரூபாவாகும். இப்போது ஆயிரம் ரூபாய் என கூறினாலும் அது அடிப்படையில் கூட்டப்படவில்லை.

எனவே மரத்தில் விழுந்தவனை மாடு முட்டுவது போன்று கம்பனிகள் நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கமும், பெருந்தோட்ட கம்பனிகளும் எமது மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் உரையாற்றும்போது கூறியதானது,

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது, அதேபோல் வரிகளை நீக்குவதாகவும், வட்டி வீதத்தை குறைப்பதாகவும் கூறினீர்கள். 

அந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற முடியும் என்றால் ஆயிரம் ரூபா வழங்குவதாக கூறிய வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற முடியாது. இதில் மாத்திரம் ஏன் கூட்டு ஒப்பந்தத்திற்கு செல்ல வேண்டும். பாராளுமன்றமே அதியுயர் மன்றமாகும். 

இங்கு எடுக்கும் தீர்மானமே உயரியது. அவ்வாறு இருக்கையில் பிரதமர் இந்த சபையில் வைத்தே தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறினார்.

இப்போது ஏன் கூட்டு ஒப்பந்தத்தை காரணம் காட்டுகின்றீர்கள். எம்மை பொறுத்த வரையில் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும், அதற்கு மேலதிகமாக கொடுப்பனவுகள் இருக்க வேண்டும், 12 நாட்கள் வேலை என்பதை ஏற்றுகொள்ள முடியாது என்றார்.

வடிவேல் சுரேஷ் எம்.பி கூறுகையில்,

பெருந்தோட்ட துறையினரின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என பல வருட காலமாக வலியுறுத்தப்பட்டும், பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டும் வருகின்றது. 

அரசாங்கங்களினாலும், பெருந்தோட்ட கம்பனிகளினாலும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு மக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

ஒரு நாடு, ஒரு நீதி, ஒரு சட்டம், ஒரு அரசாங்கம் என்றால் இந்த நாட்டில் வாழ்கின்ற நாட்டில் மலையக மக்களும் பிரஜைகள் என்றால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

வாக்குகளுக்கு மாத்திரம் எமது மக்களை பயன்படுத்தாது அவர்களின் வாழ்கையை நிர்ணயிக்கும் பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது.

அதனை மட்டும் ஏன் பெருந்தோட்ட கம்பனிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இது எந்த விதத்தில் நியாயம். எனவே அரசாங்கம் எமது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், 

அதில் ஏமாற்று வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட முடியாது. பெருந்தோட்ட துறையை காப்பாற்ற பல பரம்பரையாக தியாகம் செய்துவரும் எமது பெருந்தோட்ட மக்களுக்கு கொடுப்பனவுகளை கொடுத்தே ஆக வேண்டும். இதில் எமது மக்கள் வஞ்சிக்கப்படக்கூடாது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55