'உதயங்க கொத்தணியை' ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி - உலப்பனே சுமங்கல தேரர்

Published By: Digital Desk 4

05 Jan, 2021 | 04:20 PM
image

(நா.தனுஜா)

சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலையைத் தோற்றுவிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

உக்ரேனிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்துவந்து, பிரென்டிக்ஸ் கொத்தணியையும் விட மிகப்பாரியளவில் 'உதயங்க கொத்தணியை' ஏற்படுத்தப்போகின்றார்கள் என்று வன்முறைகளைத் தோற்கடிப்பதற்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்  - உலப்பனே சுமங்கல தேரர் | Virakesari.lk

இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எந்தளவிற்கு வெற்றியளித்துள்ளன என்பது தொடர்பில் ஆராயவேண்டும்.

இந்த அரசாங்கம் கொரோனாவை தமக்கான வசந்தமாக மாற்றிக்கொள்வதற்கும் அதனூடாக அரசியல் ரீதியான நன்மைகளை அடைந்துகொள்வதற்கும் முயற்சித்தது. 

அவ்வாறான நோக்கத்துடன் செயற்பட்டமையால், நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவலை மட்டுப்படுத்துவதற்குக் காரணப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளும் வலுவிழந்தன.

இந்த நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்கான இயலுமை அரசாங்கத்திடம் காணப்படாமையின் விளைவாக தற்போது 200 இற்கும் அதிகமானோரின் உயிர்கள் பலியாகியிருப்பதுடன் பெருமளவானோர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

அதேபோன்று இதுவரை காலமும் நாட்டிற்குப் பெருந்தொகையான அந்நியச்செலாவணி வருமானத்தைப் பெற்றுத்தந்த வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களை நாட்டிற்கு மீண்டும் திருப்பியழைத்து வருவதற்கு அரசாங்கத்தினால் முறையான திட்டம் வகுக்கப்படவில்லை. 

மாறாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலையைத் தோற்றுவிப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உக்ரேனிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்துவந்து, பிரென்டிக்ஸ் கொத்தணியையும் விட மிகப்பாரியளவில் 'உதயங்க கொத்தணியை' ஏற்படுத்தப்போகின்றார்கள்.

இது சுற்றுலா அமைச்சினதோ அல்லது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினதோ தேவைக்காக மேற்கொள்ளப்படவில்லை. மாறாக உதயங்க வீரதுங்க என்ற தனிநபரொருவரின் நலன்களைக் கருத்திற்கொண்டே முன்னெடுக்கப்படுகின்றது. 

கடந்த காலத்தில் நாட்டிற்கு நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அவரால் மேற்கொள்ளப்பட்ட  செயற்பாடுகளின் விளைவாகவே நாட்டிற்குள் நுழைவதற்கு உதயங்க வீரதுங்கவிற்குத் தடைவிதிக்கப்பட்டது.

எனினும் தற்போது அலரிமாளிகை, கொழும்பு - 03 என்பதையே அவர் தனது தனிப்பட்ட முகவரியாகப் பயன்படுத்துகின்றார்.

இதுஇவ்வாறிருக்க உக்ரேனிலிருந்து அழைத்துவரப்பட்ட சுற்றுலாப்பயணிகள் முறையான சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவில்லை.

இலங்கையை விடவும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய ஒரு நாட்டிலிருந்து சுற்றுலாப்பயணிகளை வரவழைத்து, உரிய சட்டதிட்டங்களை மீறி அவர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கி சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியமென்ன?

 தற்போது உக்ரேனில் நாளொன்றுக்கு அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுவதுடன் அதிக எண்ணிக்கையான உயிரிழப்புக்களும் பதிவாகின்றன.

அதுமாத்திரமன்றி புதிதாக நிலைமாற்றமடைந்த 5 வகையான கொரோனா வைரஸ் அங்கு இனங்காணப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 அவ்வாறானதொரு நாட்டிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்துவந்து எமது நாட்டின் நிலைவரத்தை மேலும் மோசமாக்குவதற்கு அரசாங்கம் ஏன் முற்படுகின்றது? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01