பாகிஸ்தான் முன்னாள் மகளிர் கிரிக்கெட் அணித் தலைவிக்கு கொரோனா

Published By: Vishnu

05 Jan, 2021 | 01:48 PM
image

பாகிஸ்தான் முன்னாள் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சனா மிர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

கராச்சியில் நடைபெற்று வரம் காயிட்-இ-அசாம் கிண்ண இறுதிப் போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.பி) வர்ணனைக் குழுவில் இருந்த சனா மிர், போட்டியின் மூன்றாம் நாளில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டிய பின்னர் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அந்த பரிசோதனை முடிவுகளிலேயே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையில் முழு போட்டிக்கான வர்னணைப் பணியில் ஈடுபட்ட வர்ணனையாளர்களும், சனா மீருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களையும் கொவிட் பரிசோதனைகளுக்கு உட்படுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

35 வயதான சனா மிர்  கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 2009 முதல் 2017 வரை பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைவராக சனா மிர் 226 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பாகிஸ்தான் பந்துவீச்சு வரிசையில் ஒரு முக்கிய வீரராக இருந்த சனா மிர், 2018 ஒக்டோர் மாதத்தில் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி மகளிர் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49