இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, உத்தரபிரதேச மாநிலம் நோடியா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் குறித்த இளம் பெண் தனது பிறந்த நாளை கொண்டாட நோடியா நகரத்திற்கு தனது ஆண் நண்பருடன் சென்றுள்ள நிலையில், அடுக்குமனை குடியிருப்புத் தொகுதி ஒன்றில் குறித்த இளம்பெண் நிர்வாணநிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளம் பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பதாக பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக பொலிஸார் 4 இளைஞர்களை கைது செய்துள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.