உக்ரைனிலிருந்து அழைத்து வரப்படுவோர் ஆட்சியாளர்களின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் - ஐக்கிய தேசியக் கட்சி

Published By: Digital Desk 4

05 Jan, 2021 | 07:06 AM
image

(நா.தனுஜா)

உலகளாவிய சுகாதாரத் தரவுகளின்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உக்ரேன் 17 ஆவது இடத்தில் இருக்கின்றது.

ஆனால் அரசாங்கம் இத்தகைய முக்கிய காரணிகளைப் புறக்கணித்துவிட்டு, ஆட்சியாளர்களின் குடும்பத்துக்கு நெருக்கமான தனிநபர் ஒருவரினால் ஏற்பாடு செய்யப்பட்டமையினால் உக்ரேனிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்துவருகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சந்தித் சமரசிங்க குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இந்த சுற்றுலாப்பயணத்தை ஏற்பாடு செய்வதில் எந்த கம்பனிகள் தொடர்புபட்டிருக்கின்றன? அவற்றின் உரிமையாளர்கள் யார்? அவர்கள் எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டனர்? இதற்கான அரசாங்கத்தினால் எந்தளவு நிதி செலவிடப்பட்டுள்ளது? என்பது போன்ற விடயங்களை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

உக்ரேன் சுற்றுலாப்பயணிகள் நாடு முழுவதும் அழைத்துச்செல்லப்படுகின்றமை மிகுந்த அவதானத்திற்குரியதாக மாறியிருக்கின்றது.

உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்து வருவதன் ஊடாக அரசாங்கம் நாட்டுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.

உலகளாவிய சுகாதாரத் தரவுகளின்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உக்ரேன் 17 ஆவது இடத்தில் இருக்கின்றது.

ஆனால் அரசாங்கம் இவையனைத்தையும் புறக்கணித்துவிட்டு, ஆட்சியாளர் குடும்பத்துக்கு நெருக்கமான தனிநபர் ஒருவரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாப்பயணிகளை அழைத்துவரும் இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

நாட்டில் சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயமாக அமுலிலுள்ள சூழ்நிலையில், புதிதாக நாட்டிற்குள் பிரவேசிப்போர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என்ற நடைமுறையும் காணப்படுகின்றது. 

எனினும் உக்ரேனிலிருந்து வருகைதந்த சுற்றுலாப்பயணிகள் 5 நாட்கள் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அதுமாத்திரமன்றி அவ்வாறு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளில் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சுகாதாரப்பிரிவு என்பவற்றினால் முன்வைக்கப்பட்டிருந்த வழிகாட்டல்களைப் பின்பற்றாமலேயே இந்த சுற்றுலாப்பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிலிருந்து வருகைதந்த சுற்றுலாப்பயணிகளை யால தேசிய பூங்காவிற்கு அழைத்துச்சென்ற ஜீப் வாகன சாரதிகள் 28 பேரை தனிமையிலிருக்குமாறு சுற்றுலாப்பயணத்தை ஒழுங்குசெய்தவர்கள் நிர்பந்தித்துள்ளனர்.

இந்த சாரதிகள் திஸ்ஸமகாராம பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்டதுடன், சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளுடன் தயார்நிலையில் இருந்த சாரதிகளைப் போன்று இவர்கள் தயாராக இருக்கவில்லை.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறையும் அதனைச் சார்ந்த தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், தற்போது இந்த சுற்றுலாப்பயணத்தின் விளைவாக எவ்வித முன்னேற்றகரமான மாற்றங்களும் ஏற்பட்டுவிடவில்லை. 

உக்ரேனுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இந்த சுற்றுலாப்பயண ஏற்பாட்டில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

எனினும் இந்த சுற்றுலாப்பயணத்தை ஏற்பாடு செய்வதில் எந்த கம்பனிகள் தொடர்புபட்டிருக்கின்றன? அவற்றின் உரிமையாளர்கள் யார்? அவர்கள் எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டனர்? இதற்கான அரசாங்கத்தினால் எந்தளவு நிதி செலவிடப்பட்டுள்ளது? என்பது போன்ற விடயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆகவே இவ்வனைத்து விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் நன்கு கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று இந்த சுற்றுலாப்பயணத்தின் விளைவாக புதியதொரு கொரோனா வைரஸ் கொத்தணி ஏற்படுமாயின், 

அது ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரத்திற்கு மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33