நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் முறையாக கொண்டு செல்லப்படும் - அலிசப்ரி

Published By: Digital Desk 4

04 Jan, 2021 | 09:03 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தடைப்பட்டிருந்த நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் முறையாக மேற்கொண்டுசெல்ல அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்குள் தள்ளப்படுவார்கள் - அலி சப்ரி  எச்சரிக்கை | Virakesari.lk

கொவிட் இரண்டாம் அலை காரணமாக தடைப்பட்டிருந்த நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் கொழும்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் மற்றும்  ஊழியர்களுக்கு கொவிட் பாதுகாப்பு தொகுதிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் இரண்டாம் அலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம் நீதிமன்ற நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள முடியாமல் போயிருந்தது.

அதனால் மீண்டும் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றோம். அதற்காக நீதிமன்ற சேவையில் இருக்கும் சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு கொவிட் சுகாதார பாதுகாப்பு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன.

அத்துடன் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் பல குறைபாடுகள் இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது.குறிப்பாக கட்டடங்களுக்கு தேவையான மீள் செப்பனிடும் நடவடிக்கை, காரியாலய காப்பக வசதிகள் மற்றும் மலசலகூடங்கள் உட்பட ஏனைய அடிப்படை வசதிகளை விரைவில் பூர்த்திசெய்ய அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கின்றேன் என்றார்

மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சட்டத்தரணிகள் நீதிமன்ற பணியாட்தொகுதிகளுடன் கலந்துரையாடி தேவையான வசதிகள் தொடர்பாக இதன்போது அமைச்சர் தேடிப்பார்த்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04