தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை நிலை பற்றி இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

Published By: Digital Desk 3

05 Jan, 2021 | 09:17 AM
image

(நா.தனுஜா)

2020 ஆம் ஆண்டிற்கான நாட்டின் பொருளாதார செயற்பாடுகளை நோக்குமிடத்து 3.9 சதவீத வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், மீண்டும் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்காகத் தற்போது காணப்படுகின்ற தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை நிலையையே 2021 ஆம் ஆண்டிலும் தொடரவுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.

2020 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார மதிப்பீடு மற்றும் 2021 இல் பொருளாதார மீட்சிக்கான வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கையொன்றை இன்று திங்கட்கிழமை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் சமர்ப்பித்திருக்கிறார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்று சமூகங்கள், பொருளாதாரங்கள் மற்றும் நிறுவனங்களின் தொழிற்பாட்டு முறைகளை கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு முற்றுமுழுதாக மாற்றியமைத்திருக்கிறது. இது இரண்டாம் உலகப்போரின் பின்னர் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மிகப்பாரிய நெருக்கடியாகும். ஏனைய உலகநாடுகளின் பொருளாதாரத்தைப் போன்றே, கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட பயணத்தடைகளின் காரணமாக எமது நாட்டின் பொருளாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதன் விளைவாகப் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கமும் மத்திய வங்கியும் இணைந்து மேற்கொண்டன.

நாணய நிலைமைகளைத் தளர்த்துவதற்கான மத்திய வங்கி முன்னொருபோதுமில்லாத புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தியதுடன் கடன் வழங்கல் தொடர்பான நிதியங்களின் செலவினையும் குறைத்தது. அதேபோன்று அரசாங்கமும் இறைத்தூண்டலுக்கான பல்வேறு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியது. எனினும் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளின் விளைவாகத் தளர்வடைந்த பொருளாதார செயற்பாடுகள் அரச இறையில் குறிப்பிடத்தக்க சரிவொன்று ஏற்படுவதற்குக் காரணமாகியது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த அறிக்கையில் 2021 மற்றும் அதறக்கு அப்பால் நாணயக்கொள்கை உபாயம் மற்றும் கொள்கைகள், 2021 மற்றும் அதற்கு அப்பால் நிதியியல்துறையின் செயலாற்றம் மற்றும் உறுதிப்பாட்டுடன் தொடர்புடைய மத்திய வங்கியின் கொள்கைகள், துணை மற்றும் முகவர் தொழிற்பாடுகளுடன் தொடர்புடைய கொள்கைகள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் 2021 ஆம் ஆண்டிற்கான வழிகாட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவ்வழிகாட்டல்களில் கூறப்பட்டிருப்பதாவது,

நாட்டின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் 2020 ஆம் ஆண்டின் முதற்காலாண்டில் சிறிதளவிலான சரிவு, இரண்டாம் காலாண்டில் ஒப்பீட்டளவில் பாரியளவிலான வீழ்ச்சி மற்றும் மூன்றாம் காலாண்டில் சிறிதளவில் சாதகமான வளர்ச்சி என்பன அவதானிக்கப்பட்டன. எனினும் நான்காம் காலாண்டையும் கருத்திற்கொண்டு நோக்குகையில், பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த ஆண்டிற்கும் 3.9 சதவீத வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பொருளாதார நடவடிக்கைகளில் எதிர்பார்க்கப்பட்ட மீட்சியை உறுதிப்படுத்தும் நோக்கில், தற்போது காணப்படுகின்ற தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை நிலையையே மத்திய வங்கி 2021 ஆம் ஆண்டிலும் தொடரவுள்ளது.

மேலும் கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த வளத்திற்குக் கீழேயே தொழிற்பட்டு வருகின்றது. இந்த நிலைமை கொவிட் - 19 திடீர் பரவலினால் மேலும் விரிவடைந்திருக்கிறது. இந்நிலையில் பொருளாதாரத்திற்குத் தூண்டுதலளிக்கும் வகையில் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகள் உண்மைப் பொருளாதாரத்தின் காத்திரமான வளர்ச்சிக்குப் பங்களிப்புச்செய்யும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி பொருளாதார மீட்சிக்காக மேற்கொள்ளப்படக்கூடிய மேலும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58