பிக்குகளுக்காக தானம் செய்யப்படும் பொருட்களை கொள்ளையிட்ட இருவர் கைது 

Published By: Digital Desk 4

04 Jan, 2021 | 04:02 PM
image

(செ.தேன்மொழி)

அநுராதபுரம் - ருவன்வெலிசாயாவில் பிக்குகளுக்காக தானம் செய்யப்படும் பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

அநுராதபுரம் - ருவன்வெலிசாய பிரதான பலி பீடத்தில் வைக்கப்பட்டிருந்த பிக்குகளுக்காக தானம் செய்யப்படும் பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரையும் பொhலிஸார் கைது செய்துள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம மற்றும் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களால் கொள்ளையிடப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு கொள்ளையிட வந்தவர்களில் ஒருவர் தன்னை பிக்கு என்றே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்ளுக்கு எதிராக கொள்ளை மற்றும் மத நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் , அநுராதபுரம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08