திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தீப்பிடித்ததில் அதில் சிக்கிய 300 பேரை மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜசிம் இஸா முஹமட் ஹாசன் வீரமரணம் அடைந்துள்ளார். 

திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் சென்ற எமிரேட்ஸ் விமான சேவைக்கு  சொந்தமான விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது தரையில் மோதியதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. 

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றது.

குறித்த விபத்தில் பயணிகள் உட்பட மொத்தம் 300 பேர் உயிர் தப்பினார்கள். ஆனால் எமிரேட்ஸ் விமானம் தீ பிடித்து எரிந்தபோது  பயணிகளை மீட்க போராடிய தீயணைப்பு வீரர்  வீரமரணம் அடைந்துள்ளார். 

பயணிகளை மீட்கும் போது படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்த பிற தீயணைப்பு வீரர்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

பயணிகளை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர் ஜசிம் இஸா முஹமட் ஹாசனிற்கு டுபாய் விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.