ஜோர்ஜியாவின் உயர்மட்ட அதிகாரியுடனான உரையாடலில் ட்ரம்ப் போட்ட திட்டம் அம்பலம்

Published By: Vishnu

04 Jan, 2021 | 10:39 AM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவின் உயர்மட்ட தேர்தல் அதிகாரியிடம் மாநில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அவர் இணங்கவில்லை என்றால் "ஒரு பெரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

ஜோர்ஜியாவின் வெளியுறவு அமைச்சர் பிராட் ராஃபென்ஸ்பெர்கருடன் ட்ரம்ப் ஒரு மணிநேரம் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடல் ஒன்று கசிந்த நிலையில் அதனை ஆதாரம் காட்டி வொஷிங்டன் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

வெளியான தேர்தல் முடிவுகளினால் ஜோர்ஜியா மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை. அதனால் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்குமாறும் ட்ரம்ப் பிராட் ராஃபென்ஸ்பெர்கரிடம் இந்த உரையாடலில் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

ஜோர்ஜியாவில் ஜோ பைடன் 11,779 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சனிக்கிழமையன்று முன்னெடுத்த தொலைபேசி உரையாடலின் போது, ஜோர்ஜியாவில் தேர்தல் முடிவுகளை முறியடிக்க ட்ரம்ப் முயற்சிகளைத் தொடர்ந்தார் என்றும் கூறப்படுகிறது.

2020 நவம்பர் மூன்றாம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியின் பின்னரும், ட்ரம்ப் அவரது தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். ட்ரம்பின் பல மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை முறியடிக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.

ஜோர்ஜியா ஏற்கனவே பல தணிக்கைகளையும் முடிவுகளையும் மறுபரிசீலனை செய்திருந்ததுடன்,  பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியும் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17