நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

Published By: Digital Desk 4

03 Jan, 2021 | 09:18 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற போதிலும் நீண்ட நாட்களாக முடக்கப்பட்டுள்ள பகுதிகள் அபாயமற்றவையாக இனங்காணப்படும் போது அவ்வாறான பகுதிகள் வாராந்தம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன. 

இந்நிலையில் இதுவரை 403 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் நாளை திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் விடுவிக்கப்படும் பகுதிகள்

கொழும்பு மாவட்டத்தில் முகத்துவாரம் பொலிஸ் பிரிவும் , வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் புதுக்கடை மேற்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள் , பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு, மிரிஹான பொலிஸ் பிரிவில் தெமலவத்தை (புறக்கோட்டை) என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.

கம்பஹாவில் விடுவிக்கப்படும் பகுதிகள்

கம்பஹா மாவட்டத்தில் பேலியகொட பொலிஸ் பிரிவில் பேலியகொடவத்தை கிராம சேவகர் பிரிவு, மீகஹாவத்தை கிராம சேவகர் பிரிவு, பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவும் றோஹண விகாரை மாவத்தையும் , பேலியகொட கஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நெல்லகஹாவத்தை மற்றும் பூரண கொட்டுவத்தை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதே வேளை விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஸ்ரீ ஜயந்தி மாவத்தை பகுதியும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகிறது.

இவை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மறு அறிவித்தல் வரை அவ்வாறே காணப்படும் என்றும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 8 மணி வரை 403 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44 774 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 41 031 தொற்றாளர்கள் இரண்டாம் அலையுடன் தொடர்புடையவர்களாவர்.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 37 252 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 7311 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15