கடந்த மாதம் ஆரம்பித்த 13 ஆயிரத்து 137 அன்டிஜன் பரிசோதனையில் 103 தொற்றாளர்கள் அடையாளம்..!

Published By: J.G.Stephan

03 Jan, 2021 | 03:15 PM
image

(செ.தேன்மொழி)
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கமைய இதுவரையில் 13 ஆயிரத்து 137 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்போது 103 கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும்  அன்டிஜன் பரிசோதனைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை முன்னெடுக்கப்படும். அதற்கமைய நேற்று மாத்திரம் 108 அன்டிஜன் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது ஒருவருக்கு மாத்திரமே வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை 13 ஆயிரத்து 137 அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது 103 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்றாளர்களுடன் நெருங்கி பயணித்ததாக அடையாளம் காணப்பட்ட 604 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல்மாகாணத்தில் காணப்படும் மீன் சந்தைகளிலும் தற்போது அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய நேற்று மீன்சந்தை ஒன்றில் 23 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 180 பேருக்கு இவ்வாறு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் மூன்று பேருக்கு மாத்திரமே வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04