நேற்று மாத்திரம் 90 வாகன விபத்துகள் : 9 பேர் பலி

Published By: Vishnu

03 Jan, 2021 | 11:22 AM
image

(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் நேற்று மாத்திரம் 90 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த விபத்துகளில் சிக்கி 7 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 50 பேர் சிறு காயமடைந்துள்ளனர். அதற்கமைய வாகனங்களுக்கு மாத்திரம் சேதம் எற்பட்ட 21 விபத்துகளும் பதிவாகியுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி 74 பேர் உயிரிழந்துள்ளதுடன், 149 படுகாயத்துக்கும், 607 பேர் சிறுகாயத்துக்கும் உள்ளாகியுள்ளனர். 

இந் நிலையில் மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக நேற்று மாத்திரம் 221 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களை வழக்கு விசாரணைக்காக பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். 

கடந்த 13 நாட்களுக்குள் மது போதையில் வாகனம் செலுத்தியதாக 2,045 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் வாகனங்கள் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரையிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02