பருத்தித்துறை பிரதேசத்தில் கேரள கஞ்சா வைத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றிற்கு அருகில் வைத்து குறித்த கைது இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதான இளைஞர் ஒருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 5 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தெக நபரை இன்று (04) நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.