சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் அவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் 65 ஆவது  ஆண்டுநிறைவு மற்றும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தவைவர் சாந்த பண்டார தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கூட்டு எதிர்கட்சியின் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் என சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.