அமெரிக்கா- ஈரான் இராணுவ நடவடிக்கை: வளைகுடாவில் பதற்றம்

Published By: Gayathri

02 Jan, 2021 | 08:59 PM
image

அமெரிக்காவும் ஈரானும் முன்னெடுத்துவரும் இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

கடந்த ஜனவரி 3ஆம்  திகதி  பாக்தாத்தில் ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமானி, துணைத் தளபதி அபு மெஹதி முஹென்திஸ் உள்ளிட்டவர்கள் அமெரிக்காவின் ஆளில்லா இராணுவ விமானம் மூலம் குண்டுவீசி கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் பழிக்குப் பழி வாங்குவோம் என்று முழக்கமிட்ட ஈரான் அரசு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பயங்கரவாதியாக அறிவித்தது.

மேலும், பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் ஈரான் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்த விபரம் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் ஈரான் தளபதி சுலைமானி  உட்பட  இராணுவத்தினரைக் கொலை செய்ததில் 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்பதை ஈரான் இராணுவம் கண்டறிந்துள்ளது. 

இதையடுத்து, ஈரான்  நீதிமன்றம் ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட 40 பேரைக் கைது செய்ய வலியுறுத்தி ரெட் கோர்னர் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் அமெரிக்காவும் ஈரானும் வளைகுடாவில் பதற்றங்களைத் தூண்டுவதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

வளைகுடா மற்றும் ஓமன் கடலில் "இராணுவ பயிற்சி செய்வதை அமெரிக்கா  நிறுத்துமாறு ஈரான் வியாழக்கிழமை ஐ.நா.பாதுகாப்புக் குழுவிடம் வேண்டுகோள் விடுத்தது.

ட்ரம்ப் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குமாறு இஸ்ரேலும், சவுதி அரேபியாவும் வற்புறுத்தி வருவதாக பெயரிடப்படாத அமெரிக்க ஆதாரங்களை மேற்கோள்காட்டி அரபு ஊடகங்கள்  செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் சிரேஷ்ட அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் ஈரானில் இருந்து மிகவும் கணிசமான அச்சுறுத்தல்களின் அறிகுறிகளை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்துள்ளது என்றும், ஈராக்கில் அமெரிக்க நலன்களுக்கு எதிராக ரொக்கெட் தாக்குதல்களைத் திட்டமிடுவதும் இதில் அடங்கும் என்றும்  அவர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்க இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை ஈரான் திட்டமிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52