வெவ்வேறு வாகன விபத்துக்களில் பெண்ணொருவர் உட்பட நால்வர் பலி 

Published By: Digital Desk 4

01 Jan, 2021 | 05:18 PM
image

(செ.தேன்மொழி)

நாட்டின் நான்கு வேறுபட்ட பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி பெண்ணொருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். இதன்போது நால்வர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

எல்ல

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் சாரதி உட்பட இருவர் பயணித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகிச் சென்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் பயணித்த மற்றைய நபரும் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

கட்டுவன

கட்டுவன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மித்தனிய - வலஸ்முல்ல வீதியில் சாரதி உட்பட நால்வர் பணித்த முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,வீதியை விட்டு விலகிச் சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளதுடன்,பின்னர் அருகிலிருந்த மின்கம்பத்தின் மீதும்  மோதி விபத்நு ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த சாரதியும்,பயணிகள் மூவரும் சிகிச்சைக்காக எம்பிலிபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பன்னல

பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னல - குளியாப்பிட்டி வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற டிப்பர் ரக வாகனமொன்றை முன்னோக்கி செல்ல முற்படும்போது  எதிர் திசையில் வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

யக்வில பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறக்குவானை

இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எம்பிலிபிட்டி - இரத்தினபுரி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன று பாதசாரதி பெண்ணொருவரின் மீது மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

எம்பிலிபிட்டி பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேற்படி விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06