மாகாண சபை தேர்தலை விட மக்கள் குறித்தே நாம் சிந்திக்க வேண்டும் - ரணில்

Published By: Gayathri

01 Jan, 2021 | 03:29 PM
image

(எம்.மனோசித்ரா)

மாகாண சபை தேர்தலை நடத்துவதா? இல்லையா ? என்பதை விட மக்களின் சுகாதாரமே முக்கியமானதாகும். அரசாங்கம் எவ்விதமான நிலைப்பாட்டில் இருந்தாலும் மக்கள் குறித்தே நாம் சிந்திக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தெற்கு மற்றும் பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரங்கள்  தொடர்பான நூலாக்கத்துடன்  ஆர்வமாக ஈடுப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை  கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையடினார்.  இதன்போதே மேற்கண்டவாரு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில் ,

அமெரிக்காவின் பைசர் மற்றும் ஒக்ஸ்போர்ட் கொவிட்-19 தடுப்பூசிகளில் குறைப்பாடுகள் உள்ளன. 100 வீதமான ஒரு தடுப்பூசியை இன்னும் யாரும் கண்டறியவில்லை. இதனையே உலக சுகாதார ஸ்தாபனமும் கூறுகின்கிறது.  

எனவேதான், 2021 ஆண்டிலும் பாரிய மாற்றங்கள் ஒன்றும் ஏற்பட போவதில்லை என உலக சுகாதார அமைப்பும் கூறுகின்றது.  

இதனையே உள்நாட்டு வைத்தியர்களும் கூறுகின்றனர். வைரஸ் தொற்று பல வடிவங்களை எடுத்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸின் அடுத்த கட்ட பாரிய அலை ஏற்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் வைத்திய நிபுணர் மைக்கல் டயன் கூறுகின்றார். 

இது எவ்வாறு ஏற்படும், எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் போன்றவை குறித்து ஊர்சிதமாக கூற இயலாது எனவும்  குறிப்பிட்டுள்ளார்.  இங்கிலாந்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மோசமாக அதிகரித்துள்ளது.

அரசாங்கம் எவ்விதமான நிலைப்பாட்டில் இருந்தாலும் மக்கள் குறித்தே நாம் சிந்திக்க வேண்டும். தேர்தலை விட, கொரோனாவிலிருந்து மீள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகியுள்ளது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதும் மக்களின் ஆர்வமாகியுள்ளது. கொவிட் தொற்றினால் அனைத்து தரப்புகளின் பொருளாதாரமும் வீழ்ச்சிக்கண்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் தேர்தலை நடத்துவது என்பது கொரோனாவை மேலும் வியாபிப்பதாகவே அமையும். 

எனவே, மாகாண சபை தேர்தலை நடத்துவதா? இல்லையா ? என்பதை விட மக்களின் சுகாதாரமே முக்கியமானதாகும்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பிராந்திய மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. 

உண்மையிலேயே ஜனவரி முதலாம் திகதி என்பது மற்றுமொரு நாளொன்றாகவே எமக்கு அமைகின்றது. 

நாட்டின் ஒரு பகுதி மக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வாறு புத்தாண்டை கொண்டாட முடியும்.  

எனவே, கொரோனா அச்சமற்றதொரு சூழல் அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13