ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புதல்

Published By: Vishnu

01 Jan, 2021 | 08:40 AM
image

உலக சுகாதார ஸ்தாபனம், அவசரகால பயன்பாட்டிற்காக ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் கொவிட் -19 தடுப்பூசியை பட்டியலிட்டுள்ளது.

இது ஒரு முக்கியமான கட்டமாகும் என்பதுடன், ஐ.நா.வின் சுகாதார ஸ்தாபனம் இந்த தடுப்பூசியை வளரும் நாடுகளில் எளிதில் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், அதன் தடுப்பூசியை சரிபார்த்தல் - தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து முதல் நாடுகளுக்கு தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் தங்கள் சொந்த ஒழுங்குமுறை ஒப்புதல் செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்கான கதவைத் திறக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

யுனிசெஃப் மற்றும் பான்-அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன் போன்ற குழுக்களும் தேவைப்படும் நாடுகளுக்கு விநியோகிப்பதற்கான தடுப்பூசியை கொள்வனவு செய்ய இது அனுமதிக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தடுப்பூசிகளுக்கான உலகளாவிய அணுகலை உறுதி செய்வதற்கான இது மிகவும் சாதகமான நடவடிக்கையாகும் என்று மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகளுக்கான அணுகலுக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் மரியாங்கெலா சிமாவோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மிகக் குறைந்த வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டிய இந்த தடுப்பூசி ஏற்கனவே அமெரிக்கா, கனடா, கத்தார், பஹ்ரைன் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளில் நிர்வகிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17