இந்தியாவில் உத்தரப்பிரேதசத்தில், கான்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கடத்தி சென்று 3  பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

படுகாயமடைந்த அச்சிறுமியை ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். தற்போது அச்சிறுமி அங்குள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டில், ஜூலை 28 ஆம் திகதி மாலை தனது மகள் சைப்சு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக கூறியுள்ளார். இருப்பினும் பொலிஸ் விசாரணைக்குப் பயந்து முறைப்பாடு அளிக்காமல் இரவு வரை காத்திருந்து, தனது மகள் வராமையால் தனது உறவினர்களுடன் தேட ஆரம்பித்ததாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து, அசோக், விம்லே மிஸ்ரா மற்றும் ரோஹித் ஆகிய 3 இளைஞர்கள் தன் மகளை  பக்கத்து கிராமத்திற்கு வெளியே விட்டுச் சென்ற தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த 3 பேர் மீதும் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியை அருகில் உள்ள வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாக கான்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.