புதிய வகை கொரோனா தொடர்பில் இலங்கையிலும் விசேட பரிசோதனைகள்

Published By: Digital Desk 4

31 Dec, 2020 | 09:48 PM
image

(எம்.மனோசித்ரா)

உலக நாடுகள் பலவற்றில் தற்போது பதிவாகி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவியுள்ளதா என்பதை கண்டறிவதில் விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் உயிரியல் பிரிவு இந்த பரிசோதனையை ஆரம்பித்துள்ளது.

இதன் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவன்தர இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் மேற்கொள்ளப்படும் பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இந்த உருமாறிய வைரஸ் அடங்கக்கூடிய தொற்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு உலகம் முழுவதிலும் பரவிவரும் இந்த உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்கு தனியான விசேட மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த உருமாறிய வைரஸ் இங்கிலாந்தில் முதலில் இனங்காணப்பட்டது. இது தற்போது பல நாடுகளிடையே பரவி வருகிறது. இந்தியாவிலும் பரவி இருப்பதாக தெரியவந்துள்ளது. பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் அறிந்துக்கொள்ள முடியாது என்று கூறுவதற்கில்லை. 

இதுதொடர்பில் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை. இருப்பினும், பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இதனை வேறுப்படுத்தி அடையாளம் காண முடியாது.

இந்த உருமாறிய வைரஸை அடையாளம் காண்பது இலங்கை போன்ற நாடுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை தேவைக்கேற்ற வகையில் சுகாதார பிரிவினர்களினால் தனிமைப்படுத்தப்படுவர். சரியான சுகாதார நடைமுறைகளை பயன்படுத்தி தொற்று பரவலை தடுக்க முடியும்.

தற்போதுள்ள நிலைமையில் இதுதொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. இருப்பினும் ஒரு பிரச்சினை உண்டு. பொதுவாக நாம் பி.சீ.ஆர் பரிசோதனையில் குறிப்பிட்ட இலக்குடன் செயல்படும் போது அந்த இலக்கு சிலவேளை தவறக்கூடும். இதனால் பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் இதனை கண்டறிய முடியாது என்று திட்டவட்டமாக கூறமுடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14