புதிய ஆண்டு, இறை ஆசியையும், பாதுகாப்பையும் தரும் ஆண்டாக அமையட்டும்: யாழ். ஆயர்...!

Published By: J.G.Stephan

31 Dec, 2020 | 12:05 PM
image

2021ஆம் புதிய ஆண்டு பிறக்கையில், இப்புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் இப்புதிய ஆண்டு, இறை ஆசீரையும் மன மகிழ்சியையும், பாதுகாப்பையும் தரும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம் என யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம்  ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையானது, ஆண்டின் முதல் தினத்தை தேவ அன்னையின் தினமாகப் பிரகடனப்படுத்தி அன்றைய தினத்தில் ஆண்டு முழுவதிற்குமான அன்னையின் விசேட ஆசீரைப் பெற பணித்து நிற்கிறது. இறைவனின் அன்னை மரியாள் தாய்க்குரிய அன்போடு எம் அனைவரையும் இவ்வாண்டு முழுவதும் பாதுகாத்து எத்தீங்குமின்றி வழிநடத்தி எம் அனைத்துத் தேவைகளிலும் எம்மை நிறைவு செய்வாராக.

கடந்த ஆண்டு பல இன்ப, துன்ப அனுபவங்களை நாம் பெற்று ஏற்றுக்கொண்டுள்ளோம். வருகின்ற புதிய ஆண்டிலும் இறைவன் தர இருக்கின்ற இன்ப துன்ப அனுபவங்களை இறை சித்தமாக ஏற்றுக் கொள்வோம்.

2020ஆம் ஆண்டு அனைவருக்கும் ஒரு துன்பமிக்க ஆண்டாகவே கடந்து சென்று  உள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்களால் இலங்கையிலும் கொரோனா தொற்றால் உலகம் முழுவதிலும் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது.

இன்னும் முடிவில்லாமல் கொரோனா தொற்று போய்க்கொண்டே உள்ளது. அதனைவிட இன்னும் வேறு வகை கொரோனா பரவுகிறது என்ற செய்தி பயமூட்டுவதாகவே உள்ளது. எமது கிறஸ்மஸ் செய்தியில் தெரிவித்த கருத்தை திரும்பவும் இங்கு வலியுறுத்த விரும்புகிறோம். இறைவன் உலக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து இந்த தொற்று நோய் உலகில் இருந்து முற்றாக அகல வேண்டுமென பிராத்தியுங்கள். செபத்தால் மட்டுமே இந்த தொற்றுநோயை நீக்க முடியும் என நம்பி மத பேதமின்றி இறைவேண்டுதல் செய்யுங்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையும் அரசியல் கைதிகள் விடயமும் இன்னும் அரசால் தீர்க்கப்படாமலும் கவனிக்கப்படாமலும் உதாசீனம் செய்யப்பட்டும் வருவது வேதனைக்குரியது. ஆரசியல் தலைவர்களும் சம்பந்தப்பட்டவர்களும் இந்த விடயத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்தி அரசை செயற்பட வலியுறுத்த வேண்டுமென அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

2021ஆம் புதிய ஆண்டு அனைவருக்கும் இறை ஆசீரையும் மன மகிழ்வையும் பாதுகாப்பையும் தரும் ஆண்டாக அமையட்டும் என இறையாசீர் வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50