புகையிரத சேவைகள் நாளை முதல் வழமையான முறையில் இடம்பெறும்...!

Published By: J.G.Stephan

30 Dec, 2020 | 07:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)


புகையிரத சேவைகள் நாளை வழமையான முறையில் இடம் பெறும். தூர பிரதேசங்களுக்கான புகையிரத சேவை குறித்து இவ்வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்க பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் புகையிரத சேவையினை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட திட்டம் வகுக்கப்பட்டுள்ளன.

நாளை மறுதினம் முதல் புகையிரத சேவை வழமை போன்று இடம்பெறும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் புகையிரத சேவை முடக்கப்பட்டுள்ளது. தூர பிரதேச புகையிரத சேவை குறித்து இவ்வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

நாளை மறுதினம் முதல் தூர பிரதேச பேருந்து சேவை வழமை போன்று சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்துமாறு பஸ் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பேருந்து சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.

போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சுமார் 10 பேருந்துகள் இதுவரையில்  இனங்காணப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களிலும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரத்தையும் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

இதனிடையே, ஜனவரி முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகளை  சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையும் குறிப்பிட்டுள்ளது.  ஆசன எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு பஸ் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43