கொரோனா தொற்றில் ஏற்படும் முஸ்லிம் மரணங்களில் பாரிய சந்தேகம்: அஸாத் சாலி..!

Published By: J.G.Stephan

30 Dec, 2020 | 05:29 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)
கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் முஸ்லிம் மரணங்களில் பாரிய சந்தேகம் இருக்கின்றது. அதனால் இதுதொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கொரோனா தொற்றில் மரணித்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்களாக இருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 22மில்லியன் சனத்தொகையைக்கொண்ட இலங்கையில்  சுமார் 10 வீதமே முஸ்லிம்கள். ஆனால் கொரோனா தொற்றில் இலங்கையில் மரணித்தவர்களில் மொத்த எண்ணிக்கையில் 10வீதம் கொண்ட முஸ்லிம் சமூகத்தில் இருந்து 80 வீதமான கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் இந்த மரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என அரசாங்கத்தை கேட்கின்றோம்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர். ஆனால்  அவர்கள் அங்கு கொண்டு சேர்க்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு அங்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் இடம்பெறுவதில்லை என அங்கு சென்றுவந்தவர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் கொரோனா தொற்றை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் என்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை என்பவற்றில் முரண்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 14நாட்கள் இருந்துவிட்டு வீடு திரும்பியதுடன் மரணித்த சம்பவங்களும் இடம்பெற்றிக்கின்றன. 

எனவே இந்த விவகாரங்களுக்கு பின்னணியில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அதனால் இதுதொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58