திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் விபத்திற்குள்ளானது. இன்று பகல் 12.45 மணிக்கு டுபாயில் விமானம் தரையிறங்கிய போது விமானத்தில் திடீரென தீப்பிடித்தது.

தீ விபத்தையடுத்து பயணிகள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.  தீயை அணைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.  

 எவ்வாறு தீப்பிடித்தது, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. இந்த விமானத்தில் 282 பேர் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.