பெளத்த பிக்குகளின் ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் அரசாங்கமே உள்ளது - முஜிபுர் ரஹ்மான் 

Published By: Digital Desk 4

29 Dec, 2020 | 09:18 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது என தெரிவித்து ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களுக்கு பின்னால் அரசாங்கமே இருக்கின்றது. 

Articles Tagged Under: முஜிபுர் ரஹ்மான் | Virakesari.lk

அரசாங்கத்தின் தோல்வியை மறைத்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கையையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவி்த்தார்.

பெளத்த பிக்குகள் இணைந்து நேற்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் குறித்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யக்கூடாது என தெரிவித்து நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் பெளத்த பிக்குகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள்தான் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக பாடுபட்டவர்கள். 

அத்துடன் கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாங்கள் கோரி வருகின்றோம். அரசாங்கமும் இதுதொடர்பாக ஆய்வு ரீதியிலான பதிலொன்றை வழங்காமல் இருந்து வருகின்றது. 

தொழிநுட்ப குழுவொன்றை அமைத்து அதன்மேல் பொறுப்பை சாட்டிவருகின்றது. அந்த குழுவும் இதுதொடர்பாக ஆய்வு செய்து இதுவரை எந்த தீர்மானத்தையும் வெளிப்படுத்த வில்லை. 

மேலும் உலகில் 190 க்கும் அதிக நாடுகளில் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கும்போது எமது நாட்டில் மாத்திரமே அதற்கு மனுமதி வழங்காமல் இருக்கின்றது. கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என உலக சுகாதார அமைப்பு தெளிவாக தெரிவித்திருக்கின்றது. அதேபோன்று எமது நாட்டில் இருக்கும் வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் பலரும் இதுதொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றனர். அப்படி இருந்தும் அரசாங்கம் தொடர்ந்தும் இதற்கு அனுமதிவழங்காமல் இருந்து வருகினறது. இது அரசாங்கத்தின் இனவாத போக்கையே வெளிப்படுத்தியிருக்கின்றது.

அத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் கடந்தும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாமல்போயிருக்கின்றது. அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் தோல்வியிடைந்திருக்கின்றன. அரசாங்கத்தின் தோலிவியை மறைப்பதற்கே பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிறுபான்மை தொடர்பில் சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையில் ஜனாசாக்களை எரிக்கும் விடயத்தை அரசாங்கம் கையில் எடுத்துக்கொண்டிருக்கின்றது.

மேலும் ஜனாசா எரிப்புக்கு எதிராக உலகம் பூராகவும் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் அதனை சமாளிக்கும் வகையிலே, அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்து வரும் பிக்குள் சிலர் திடீரென ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு இறங்கி இருந்தனர். இவர்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்யவேண்டிய எந்த தேவையும் இல்லை. 

ஜனாதிபதியுடன் நேரடியாக கலந்துரையாட முடியும். ஆனால் சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் சடலங்களை எரிப்பதற்கு எதிராக குரல்கொடுத்துவரும் நிலையில் அரசாங்கமே  இந்த ஆர்ப்பாட்டத்தக்கு பின்னால் இருந்து இதனை மேற்கொண்டிருக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50