முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவின் கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லலித் வீரதுங்கவின் கோரிக்கைக்கு இணங்க குறித்த கடவுச்சீட்டு 10 மில்லியன் ரூபா கடன் பத்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு புனித யாத்திரை ஒன்றை மேற்கொள்ளவுள்ளமைக்காக  குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் மூபாவில் , மத ரீதியான 'சில்' துணிகளை பகிர்ந்தளித்தமை தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது,