முக்கிய வீரர்களை இழந்து தடுமாறும் இலங்கை இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா?

Published By: Vishnu

29 Dec, 2020 | 01:55 PM
image

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 160 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் தென்னாபிரிக்க அணியுடன் இரு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி செஞ்சூரியனில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது தனது முல் இன்னிங்ஸுல் 396 ஓட்டங்களை குவித்தது.

அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸுக்காக பதிலுக்குத் துடுப்பெடித்தாடிய தென்னாபிரிக்க அணியானது 142.1 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 621 ஓட்டங்களை குவித்தது.

போட்டியின் மூன்றாவது நாளான நேற்று ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் டூப்பிளஸ்ஸி தனது டெஸ்ட் வாழ்க்கையில் அதிகபடியான ஓட்டங்களை பதிவுசெய்தமை தான்.

சதம் விளாசிய டூப்பிளஸ்ஸி 150 ஓட்டங்களையும் கடந்து இரட்டை சதத்தை நோக்கி பயணத்தபோதும், அவரது இரட்டை சதம் பெறும் வாய்ப்பு ஒரு நூலில் தவறவிடப்பட்டது.

அதன்படி மொத்தமாக 276 பந்துகளை எதிர்கொண்டு 24 பவுண்டரிகள் அடங்கலாக 199 ஓட்டங்களுடன் வனிந்து ஹசரங்கவின் பந்து வீச்சில் திமுத் கருணாரத்னவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தென்னாபிரிக்க அணி சார்பில் டீன் எல்கர் 95 ஓட்டங்களையும், ஐடன் மார்க்ராம் 68 ஓட்டங்களையும், டூப்பிளஸ்ஸி 199 ஓட்டங்களையும், டெம்பா பவுமா 71 ஓட்டங்களையும், கேசவ் மகாராஜ் 73 ஓட்டங்களையும், அணி சார்பில் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், தசூன் சானக்க 4 விக்கெட்டுகளையும், லஹிரு குமார ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இதனால் 225 ஓட்டங்களினால் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காக பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணியானது நேற்றைய மூன்றாம் நாள் முடிவின்போது 2 விக்கெட்டுகளை 65 ஓட்டங்களை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 6 ஓட்டங்களுடனும், குசல் மெண்டீஸ் டக்கவுட்டுடனும் ஆட்டமிழக்க குசல் பெரேரா 33 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந் நிலையில் இலங்கை அணி எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், அணியில் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

மீதமுள்ள ஏழு பேட்ஸ்மேன்களுடன் அணிக்கு ஒத்தாசை புரிந்து வந்த  தனஞ்சய டி சில்வாவும் உபாதை காரணமாக தொடரிலிருந்து  விலகியுள்ளார். அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜிதாவின் சேவை அணிக்கு கிடைக்குமா என்பது இன்னும் சந்தேகத்தில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், இலங்கை அணி இன்னும் இரண்டு நாட்களுக்கு தங்கள் விக்கெட்டுகளை பாதுகாப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது. 

இதேவேளை தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா தொடை எலும்பு காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அதன்படி, அணி தங்கியிருக்கும் உயிர் பாதுகாப்பு சூழலுக்குள் நுழைய அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி இரண்டாவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு அவர் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்.

இன்று போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22