சவுதி உரிமை ஆர்வலர் அல்-ஹத்லூலுக்கு சுமார் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

Published By: Vishnu

29 Dec, 2020 | 08:48 AM
image

முக்கிய பெண்கள் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூலுக்கு சவுதி பயங்கரவாத நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாற்றத்திற்காக கிளர்ச்சி செய்தல், வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவது மற்றும் பொது ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இணையத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அல்-ஹத்லூல் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவரது தண்டனையை இரண்டு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் நீதிமன்றம் இடைநீக்கம் செய்துள்ளதுடன், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளன.

ஏற்கனவே 2 ½ ஆண்டுகளாக தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய பெண்களின் உரிமை பிரச்சாரகர் லூஜெய்ன் அல்-ஹத்லூலுக்கு தண்டனை மற்றும் 5 ஆண்டுகள் 8 மாத சிறைத்தண்டனை வழங்கப்படுவது ஆழ்ந்த சிக்கலாக உள்ளது என  ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

31 வயதான அல்-ஹத்லூல் 2018 முதல் குறைந்தது ஒரு டஜன் பெண்களின் உரிமை ஆர்வலர்களுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17