மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்பது எமது நிலைப்பாடல்ல - திஸ்ஸ

Published By: Digital Desk 4

28 Dec, 2020 | 09:47 PM
image

(எம்.மனோசித்ரா)

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பல்ல. மாறாக அதற்கு உரிய காலத்தை அரசாங்கம் தேர்ந்தெடுத்து அந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்துவதே பொறுத்தமானதாக இருக்கும் என்று அதன் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கண்டி மாவட்டத்தில் 'வெற்றி பெறுவோம்.' வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கட்சி யாப்புக்கான சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு பங்காளி கட்சிகளின் நிலைப்பாடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அவற்றை பெற்றுக் கொண்டதன் பின்னர் விரைவாக குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு யாப்பிற்கமைய கட்சி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாடசாலை மாணவர்களுக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இணையவழியூடாக கற்பதற்கு சகல மாணவர்களுக்கும் வாய்ப்பு இல்லை. இவை தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பலராலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. இதற்கு பதிலாக தேசிய சொத்துக்களை விற்பதையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகக் காணப்படும் சஜித் பிரமேதாசவே கூட்டணியின் தலைவராகவும் பதவியேற்பார். அவரே அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகவும் நியமிக்கப்படுவார்.

வேறு மாற்று தெரிவு கிடையாது. இதே வேளை மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அல்ல. அதற்காக மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்பதல்ல. அதற்கான உரிய காலத்தை தெரிவு செய்து நடத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55