குருணாகல் - கனேவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் இரு குழந்தைகளுமே பலியாகியுள்ளனர். 

வெல்லவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பாதுகாப்பற்ற புகையிரத கடவையை ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.