வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்...!

Published By: J.G.Stephan

28 Dec, 2020 | 04:15 PM
image

திருக்கோவில் பிரதேசத்தில் நீண்ட காலமாக வீடுகளை உடைத்து பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 18 , 19 வயதுடைய இளைஞர்கள் இருவரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.12.2020) உத்தரவிட்டார்.

கடந்த மாதங்களில் திருக்கோவில் பிரதேசத்தில் இரு வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டது. இதில் ஒருவீட்டில் இருந்து, 60 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையும், 27 ஆயிரம் ரூபா பணமும், மற்றுமொரு வீட்டில் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையும்  கொள்ளையிடப்பட்டுள்ளது.

இக்கொள்ளை தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணையில், சின்னத் தோட்டத்தைச் சேர்ந்த 18, 19 வயது இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கொள்ளையிடப்பட்ட 60 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையும், பணமும் மீட்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட ஒருவர் ஏற்கனவே கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டு, 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை அனுபவித்தவரென்பதுவும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38