நாகோர்னோ-கராபாக்கில் மீண்டும் தாக்குதல்

Published By: Vishnu

28 Dec, 2020 | 04:14 PM
image

நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் நடந்த தாக்குதலில் ஒரு சேவையாளர் கொல்லப்பட்டதாக அசர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

டிசம்பர் 27 ஆம் திகதி ஒரு சட்டவிரோத ஆர்மீனிய ஆயுதக் குழு, கோஜாவெண்ட் மாவட்டத்தில் உள்ள அக்தாம் கிராமத்தில் அசர்பைஜான் இராணுவத்தின் தளங்களை தாக்கியது. 

இதன் விளைவாக எங்கள் சேவையாளர்களில் ஒருவரான கன்பரோவ் எல்மிர் ரெயில் உயிரிழந்ததுடன், மற்றொரு சிப்பாய் காயமடைந்தார் என அசர்பைஜான் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, காயமடைந்த சேவையாளர் அவசர மருத்துவ உதவி பெற்ற பின்னர் மருத்துவ வசதிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆர்மீனிய அதிகாரிகள் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

ஆர்மீனியாவிற்கும் அசர்பைஜானுக்கும் இடையிலான தசாப்தங்களாக நீடித்த நாகோர்னோ-கராபாக் மோதல் கடந்த செப்டம்பர் பிற்பகுதியில் வெடித்தது.

இதன் விளைவாக இரு தரப்பிலும் இராணுவத்தினரும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.  

அதன் பின்னர் நவம்பர் 9 ஆம் திகதி ரஷ்ய தரகு யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதை அடுத்து மோதல் முடிவுக்கு வந்தது.

இந்த ஒப்பந்தம் சுய-பிரகடனப்படுத்தப்பட்ட நாகோர்னோ-கராபக் குடியரசின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பிரதேசங்களை இழந்தது மற்றும் பிராந்தியத்திற்கு ரஷ்ய அமைதி காக்கும் படையினரை நிறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17