கொழுப்பைக் குறைக்கும் ஜேறோனா லைப்போ லேசர் சிகிச்சை

Published By: Robert

03 Aug, 2016 | 12:37 PM
image

எம்மில் பலரும் தற்போது நாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டோம். அத்துடன் உட்கார்ந்து கொண்டே அதிக நேரம் பணியாற்றும் சூழலுக்கும் ஆட்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக உடல் எடை அதிகரித்து இடுப்பு அளவு பெருத்துவிட்டது. இதனை குறைக்க உடற்பயிற்சி மட்டும் போதாது வேறு என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்காகவே அறிமுகமாகியிருக்கிறது ஜேரோனா லைப்போ லேசர் சிகிச்சை.

இந்த சிகிச்சை என்ன செய்யும்? இதில் பக்கவிளைவு ஏதேனும் இருக்கிறதா? என்று வரிசையாக கேள்வி கேட்கும் முன் இதன் செயல்பாட்டைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். முதலில் நீங்கள் சாப்பிடும் உணவிலிருந்து கொழுப்பானது ஸ்கின் ஃபேட், ஆர்கன் ஃபேட், மஸுல் ஃபேட் என்று மூன்று இடங்களில் சேர்ந்துவிடும். உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பை கரைக்க நீங்கள் கடுமையான உழைக்கவேண்டியதிருக்கும். கடினமாக உழைக்கவில்லை என்றால் கொழுப்பு கரையாது. உணவு கட்டுப்பாடு, நீச்சல், ஸ்கிப்பிங் போன்ற கடுமையான உடற்பயிற்சிகள் செய்து தான் இதனை குறைக்கவேண்டும். 

இந்நிலையில் ஸ்கின் ஃபேட் எனப்படும் தோலுக்கடியில் சேர்ந்திருக்கும் கொழுப்புகளை கரைக்க நவீன மயமான ஜேரோனா லைப்போ லேசர் சிகிச்சை என்ற சத்திர சிகிச்சையற்ற ஒரு சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இதன் மூலம் தோலுக்கடியில் சேமிக்கப்பட்டிருககும் கொழுப்புகள் கரைவதற்கு வசதியாக அதற்குரிய தூண்டல்களை ஜேரோனா லைப்போ லேசர் என்ற சிகிச்சை மூலம் தூண்டி, கொழுப்பு கரைவதற்கு வழியமைத்து தருவோம். கொழுப்பை தாங்கி இருக்கும் செல்களை தாக்கி அழித்து, அதிலிருந்து கொழுப்பு வெளியேற துணை செய்கிறது. கொழுப்பை கரைப்பதில்லை.  ஆனால் கொழுப்பு வெளியேற துணை செய்கிறது. அதனைத் தொடர்ந்து நீங்கள் செய்யும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் அந்த கொழுப்பு வெளியேறிவிடும். இந்த சிகிச்சைக்கு பின் உடல் எடை 8 முதல் 10 இன்ச் அளவுகளில் குறைந்திருப்பதை காணலாம். அதே தருணத்தில் உங்கள் உடலிலிருக்கும் நீர்ச்சத்திற்கும், தசை நார் வலுவிற்கும் எந்தவொரு சேதமும் ஏற்படாது. இது தான் இந்தி சிகிச்சையின் சிறப்பு.

இது ஒரு பீம் லேசர். 5 லேசர் புள்ளிகள் உங்கள் உடலை ஒரு வட்ட வடிவத்தில் சுற்றி வரும். சுற்றி வரும் போது தோல் பகுதியில் ஊடுருவி, கொழுப்புச் செல்களை தாக்குகிறது. குறைந்த அளவிலான லேசர் கதிர்வீச்சு பயன்படுத்தப்படுவதால் லேசர் நம் உடலில் பயணப்படும் போது எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

டொக்டர் சுனிதா ரவி, சிகிச்சை நிபுணர்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04