கொழும்பில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்ட - புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

Published By: Vishnu

28 Dec, 2020 | 07:16 AM
image

கொழும்பில் இன்று அதிகாலை முதல் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் புதிதாக தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் உள்ளது.

அதன்படி கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களை தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக முன்னெடுத்தல் , நீக்குதல் மற்றும் புதிதாக அமுல்படுத்துதல் கீழ் கண்ட வகையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ள (முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாக) தாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டம்

01. டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி (இன்று) அதி காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்

பொலிஸ் பிரிவு

• டேம் வீதி பொலிஸ் பிரிவு

• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு

• மருதானை பொலிஸ் பிரிவு

 கிராம உத்தியோகத்தர் பிரிவு

• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் ஹூணுப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு

• வெள்ளவத்த பொலிஸ் பிரிவில் மயுரா பிளேஸ்

• பொரளை பொலிஸ் பிரிவில் ஹல்கஹாவத்த மற்றும் காளிபுள்ளே வத்தை

• வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் லக்சந்த செவன வீடமைப்பு குடியிருப்பு

02. இன்று 28 ஆம் திகதி அதி காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசம்

• வாழைத் தோட்டப் பொலிஸ் பிரிவில் அலுத்கட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் அலுத்கட கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47