வீட்டிலிருந்து தப்பியோடிய கொரோனா தொற்றாளர் சிக்கினார்..!

Published By: J.G.Stephan

27 Dec, 2020 | 12:42 PM
image

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வீட்டிலிருந்து தப்பியோடிய நிமேஷ் மதுசங்க எனும் 22 வயதுடைய இளைஞன் அப்பிரதேசத்திலேயே ஒரு வீட்டினுள் இருந்த போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞன் சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் தனது வீட்டிலிருந்த நிலையிலேயே தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த இளைஞன் அண்மையில் மஹர சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும், அவரை வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. 

மேலும், அவரிற்கு சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவரை ஒரு சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றிருந்தபோது அவர் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்தார். இந்நிலையிலேயே அவர், அப்பிரதேசத்திலேயே ஒரு வீட்டினுள் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தப்பியோடிய குறித்த, இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் தெரியவந்துள்ளது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31