ஒரு வாரத்தில் விற்றுத் தீர்ந்த Huawei P9 ஸ்மார்ட்போன்

Published By: Priyatharshan

03 Aug, 2016 | 11:08 AM
image

இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தனது முதற்தொகுதி Huawei P9 என்ற புதிய பிரதான ஸ்மார்ட்போன்கள் வெற்றிகரமாக விற்றுத் தீர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. 

தொழிற்துறையின் புள்ளிவிபரங்களின் பிரகாரம், இந்த ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ள உயர் தரத்திலான கமராவின் பெறுபேறாக Huawei நிறுவனம் மற்றும் அதன் பிரத்தியேக தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி ஆகியன இந்த சாதனை இலக்கை அடைய முடிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகிய உடனேயே கொள்வனவு செய்வதில் மேல் மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையானோர் ஈடுபட்டுள்ளதுடன், தென் மற்றும் மத்திய மாகாணங்கள் உச்ச அளவிலான விற்பனையை பதிவாக்கியுள்ள மாகாணங்களாகத் திகழ்கின்றன என Huawei இன் விற்பனை புள்ளிவிபர அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேசரீதியாக பிரபலமான வர்த்தகநாமமாக திகழ்ந்துவருகின்ற Leica Camera AG உடன் இணைந்து இணை வடிவமைப்புச் செய்யப்பட்ட முதலாவது ஸ்மார்ட்போன் உற்பத்தியாக Huawei P9 திகழ்கின்றது. 

P9 இன் இரட்டை வில்லைகளைக் கொண்ட கமரா, ஸ்மார்ட்போன் புகைப்படவியலை அடுத்த மட்டத்திற்கு எடுத்துச்சென்று, துல்லியமான வர்ணங்கள் மற்றும் ஈர்ப்பான கறுப்பு மற்றும் வெள்ளை படங்களை கைவசப்படுத்துவதற்கு மக்களுக்கு இடமளிக்கின்றது. 

P9 கொண்டுள்ள பரந்த வகைப்பட்ட நிறங்களிலான புகைப்படவியல் தனிச்சிறப்புக்கள், தனித்துவமான படங்கள் மற்றும் உள்ளடக்கங்களை உருவாக்கி, புத்தாக்கமான காட்சி விளைவுகளை அனுபவிப்பதற்கு பாவனையாளர்களுக்கு இடமளிக்கின்றது. 

5.2 அங்குல 1080p முகத்திரை, ARM அடிப்படையிலான புரோசசரான புதிய Kirin  955 2.5GHz 64-bit இன் வலுவூட்டல் கொண்ட P9 முன்னிலை வகிக்கின்ற மொபைல் பெறுபேற்றுத்திறனை வழங்குகின்றது.

 P9 கொண்டுள்ள உயர் அடர்த்தி கொண்ட 3,000mAh கொண்ட மின்கலமானது மிகவும் வசதியாக எடுத்துச் செல்லும் தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் மின்கலம் ஆகியவற்றை பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது.

இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு கூறுகையில்,

“இலங்கையில் புதிய Huawei P9 ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள மகத்தான வரவேற்பையிட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். முதன்முறையாக அறிமுகமாக்கப்பட்டுள்ள புத்தாக்கங்கள் மற்றும் மிகச் சிறந்த வடிவமைப்பு ஆகியவற்றின் தனித்துவமான இணைப்பை புதிய Huawei P9 கொண்டுள்ளதுடன், ஸ்மார்ட்போன் புகைப்படவியலில் புதிய ஒப்பீட்டு தர நியமத்தை ஏற்படுத்தியுள்ளன. 

இந்த தனித்துவமான ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்வதற்கான முற்பதிவை மேற்கொண்டு, நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவியரீதியிலுள்ள எந்தவொரு Huawei விற்பனை நிலையத்திற்கும் வருகை தருமாறு நாம் எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்”.

இலங்கையில் Huawei சாதனங்களுக்கான சந்தைப்படுத்தல் முகாமையாளரான ருவான் கமகே அவர்கள் கூறுகையில்,

“உற்பத்தியின் பிரதான பெறுமானங்களை எடுத்துக்கூறுகின்ற தொடர்பாடல் மட்டுமன்றி, எமது Huawei விரும்பிகள் நாடளாவியரீதியில் P9 இன் அதிசிறந்த அம்சங்களை அனுபவிக்கும் வாய்ப்பையும் வழங்கும் வகையில் பல்வேறு தொடர் ஊக்குவிப்புப் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க Huawei திட்டமிட்டுள்ளது”.

இலங்கையில் தற்போது இரண்டாம் இடத்திலுள்ள ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக Huawei திகழ்வதுடன் அடுத்த சில காலாண்டுகளில் நாட்டில் முதல் இடத்தில் திகழுகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக மாறவுள்ளது. 

இலங்கையில் முதலிடத்தில் திகழும் வர்த்தகநாமமான சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி இனால் Huawei சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றது.

2016 ஆம் ஆண்டில் கணிசமான வளர்ச்சியை Huawei எதிர்பார்த்துள்ளதுடன் அது கடந்த ஆண்டிலும் ஈடுஇணையற்ற சாதனைகளைப் படைத்திருந்தது. GFK இன் புள்ளிவிபரங்களுக்கு அமைவாக இலங்கையில் 2016 ஆண்டின் முதற்காலாண்டில் 23.3% சந்தைப் பங்கினை Huawei பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், நாட்டில் இரண்டாம் இடத்தில் திகழ்ந்து வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் என்ற தனது ஸ்தானத்தை மேலும் விரைவுபடுத்தி வருகின்றது.

Brand Finance இன் தரப்படுத்தலுக்கு அமைவாக, 2016 ஆம் ஆண்டில், உலகில் மிகவும் பெறுமதிகொண்ட 100 வர்த்தகநாமங்கள் பட்டியலில் 47 ஆவது ஸ்தானத்தில் Huawei இடம்பெற்றுள்ளது. அண்மைய புள்ளிவிபர அறிக்கைகளின் பிரகாரம், Huawei ஆனது உலகளாவில் மூன்றாவது ஸ்தானத்திலுள்ள ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாகவும், சீனாவில் முதலாவது ஸ்தானத்திலுள்ள ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாகவும் திகழ்ந்து வருகின்றது.

Huawei இன் உற்பத்திகளும் சேவைகளும் 170 இற்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கப்பெறுவதுடன், உலகின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினரால் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. 

2015 ஆம் ஆண்டில் உலகில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொபைல் தொலைபேசிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மூன்றாவது ஸ்தானத்தில் Huawei உள்ளது.

ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, சுவீடன், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் பதினாறு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் அது நிறுவியுள்ளது. Huawei இன் மூன்று வியாபாரப் பிரிவுகளுள் ஒன்றாக Huawei Consumer BG செயற்பட்டு வருவதுடன், ஸ்மார்ட்போன்கள், PC மற்றும் tablet சாதனங்கள், அணியக்கூடிய தொழில்நுட்ப சாதனங்கள் (Wearables) மற்றும் cloud சேவைகள் போன்றவற்றின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. 

தொலைதொடர்பு தொழிற்துறையில் 20 ஆண்டுகள் நிபுணத்துவ அனுபவத்தின் அடிப்படையில் ர்ரயறநi இன் சர்வதேச வலையமைப்பு கட்டியெழுப்பபட்டுள்ளதுடன் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளை வழங்குவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58