தடுமாறிய இலங்கையை மீட்டெடுத்த சந்திமால் - தனஞ்சய இணைப்பாட்டம் ; முதல் நாள் முடிவில் 340/6

Published By: Vishnu

27 Dec, 2020 | 09:14 AM
image

தென்னாபிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 340 ஓட்டங்களை குவித்துள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிகளின் கீழ் டீகொக் தலைமையிலான தென்னாபிரிக்க அணியுடன் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதன் முதல் போட்டியானது நேற்றைய தினம் செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு கறமிங்கிய இலங்கை அணியானது 54 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

அதன்படி ஆரம்ப வீரராக களமிறங்கிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 22 ஓட்டங்களிலும், குசல் மெண்டீஸ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க குசல் பெரேராவும் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.  

இதனால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை அணியை நான்காவது விக்கெட்டுக்காக கைகோர்த்த தினேஷ் சந்திமலும் தனஞ்சய டிசில்வாவும் மீட்டெடுத்தனர்.

தென்னாபிரக்க அணி பந்து வீச்சாளர்களில் பந்துப் பரிமாற்றங்களை சாதூர்யமான முறையில் கையாண்ட இவர்கள் நேர்த்தியாக துடுப்பெடுத்தாடினர்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 45 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் தனஞ்சய டிசில்வா 79 ஓட்டங்களுடனும், சந்திமால் 41 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

அதன் பின்னர் தனஞ்சய டிசில்வா உபாதை காரணமாக ஆட்டத்தை இடைநிறுத்த சந்திமாலுடன் நிரோஷன் டிக்வெல்ல கைகோர்த்து துடுப்பெடுத்தாடினார்.

இதன் காரணமாக இலங்கை அணி 65 ஓவர்களுக்கு 283 ஓட்டங்களை குவித்தது. அதன் பின்னர் சந்திமால் 65.4 ஆவது ஓவரில் வியான் முல்டரின் பந்து வீச்சில் டூப்பிளஸ்ஸிடம் பிடிகொடுத்து 85 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

சந்திமாலின் வெளியேற்றத்தையடுத்து களமிறங்கிய தசூன் சானக்கவுடன் கைகோர்த்த திக்வெல்லவும் நீண்ட நேரம் நிலைத்து நிற்காது 70.3 ஆவது ஓவரில் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

தொடர்ந்து வந்த வனிந்து ஹசரங்கவும் 18 லூத்தோ சிபாம்லாவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

வனிந்து ஹசரங்கவின் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதும் விசேட அம்சமாகும்.

அதன் பின்னர் கசூன் ராஜித மற்றும் தசூன் சானக்க ஆகியோர் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடி வர இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை (85 ஓவர்கள்) இழந்து 340 ஓட்டங்களை குவித்தது. ராஜித 7 ஓட்டங்களுடனும், சானக்க 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸில் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.

உபாதை காரணமாக 79 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்திய தனஞ்சய டிசில்வா இப் போட்டியில் தொடர்ந்து விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22
news-image

டெல்ஹியுடனான போட்டியில் லக்னோவுக்கு சொந்த மண்ணில்...

2024-04-13 07:02:37