இந்தோனேசியாவில் உள்ள அச்சே மாகாணத்தை சேர்ந்த ஜோடி, திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் இருவரும் சேர்ந்து உல்லாசமாக டேட்டிங் சென்றுள்ளனர்.

இவர்களது இரகசிய டேட்டிங் வெளியில் கசிந்ததையடுத்து, அல்புர்கான் பள்ளிவாசல் முன்னிலையில் வைத்து இவர்களுக்கு கசையடி கொடுக்கப்பட்டுள்ளது, முதலில் அப்பெண்ணை, இரண்டு பெண்கள் சேர்ந்து அழைத்து வந்து மசூதியின் முன்னிலையில் உள்ள மேடையில் மண்டியிடவைக்கின்றனர்.

அதன்பின்னர், நபர் ஒருவர் வந்து தான் வைத்திருக்கும் பிரம்பால், அப்பெண்ணுக்கு கசையடி கொடுக்கிறார், இதனால் வலி தாங்க முடியாத அப்பெண் கதறி அழுகிறார். இதே போன்று அந்த நபரையும் வேறொரு இடத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர்.