தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு கட்டுப்படுத்துமாறு வடமாகாண சுகாதார சேவைகள்  பணிப்பாளர் கோரிக்கை

Published By: Digital Desk 3

25 Dec, 2020 | 12:15 PM
image

(எம்.நியூட்டன்)

தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் மற்றும் பொலிசாரின் உதவியை சுகாதாரப் பிரிவினர் ஆகிய நாங்கள் கோரியுள்ளோம்  என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ் விசேட கூடத்தில் பங்கேற்று வர் மேலும்  தெரிவிக்கையில்,

மருதனார்மடம் கொத்தணி பரம்பல் கண்டறியப்பட்டதன் பின்னர் குறித்த சந்தையோடு தொடர்புடைய வியாபாரிகள் மற்றும் சந்தைதையுடன் தொடர்புபட்ட பொதுமக்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.

அதில் ஒரு விடயம் என்னவென்றால் குறித்த சந்தைக்கு விஜயம் மேற்கொண்டு வியாபார பொருட்கள் வாங்க வந்த ஒருவரின் குடும்பத்தார் அனைவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அத்தோடு தற்போது ஏனைய சந்தைகளிலும் குறித்த தொற்று பரவாமல் இருப்பதற்காக அனைத்து சந்தைகளையும் மூடி வைத்திருக்கின்றோம் ஏனைய சந்தைகளில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மற்றும் சங்கானை சந்தைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அனைத்து சந்தைகளையும் தற்காலிகமாக மூடி வைத்து இருக்கின்றோம். அத்தோடு சந்தைவியாபாரிகள் மட்டுமல்லாது சந்தைக்கு காய்கறி வாங்க வந்தவர்கள் தொடர்பிலும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம்.

குறித்த சம்பவம் நடந்து மூன்று நாட்களின் பின்னர் ஒரு நபர் எமது சுகாதார பிரிவுக்கு அறிவித்திருந்தார் நான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த சந்தைக்கு சென்றதாக. அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தொற்று உறுதியாக இருந்தது மேலும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு முதலாவது பி.சி.ஆர் பரிசோதனையில் சில வேளைகளில் தொற்று இல்லை என காண்பிக்கும். அது சில வேளைகளில் இரண்டாவது பரிசோதனையின்போது தொற்று உள்ளதாக காண்பிக்கும். எனவே இரண்டாவது பரிசோதனை முடிவுகளின்படியே அனைத்தையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

சுகாதாரப் பிரிவினர் மிகவும் இறுக்கமாக இந்த தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம். உதாரணமாக கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் ஒரு சம்பவம் இடம்பெற்றது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒரு மதகுருவினால் இங்கு தொற்று ஏற்பட்டது.

எனினும் அந்த நேரத்தில் கூட நாங்கள் குறித்த பாதிரியாரின் ஆராதனையில் பங்கு பற்றி அனைவரையும் தனிமைப்படுத்தியதன் காரணமாக அந்த தொற்று ஏனையோருக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

எனவே தற்போதும் நாங்கள் அந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றோம். அதாவது தொற்றுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்துவதாகும்.

குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்டோருக்கு தனிமைப்படுத்தல் வெகுவிரைவில் நிறைவு செய்யப்பட உள்ளது. எனினும் வருகின்ற திங்கட்கிழமை அளவில் நாங்கள் அவர்களுடைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி அவர்களை சிலவேளைகளில் விடுவிக்க முடியும். எனவே எதிர்வரும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரை மிகவும் அவதானமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் மற்றும் பொலிசாரின் உதவியை சுகாதாரப் பிரிவினர் ஆகிய நாங்கள் கோரியுள்ளோம். ஏனெனில் தற்போது ஒரு கேள்வி உள்ளது ஒரு பிரதேசத்தின் ஏன் முடக்காது வைத்திருக்கிறீர்கள் என. குறிப்பாக நாங்கள் ஒரு பிரதேசத்தினை முடக்கினால் அந்த பிரதேசத்தில் உள்நுழையும் பகுதிகளில் மாத்திரம் வீதித் தடைகளை போடுவோம். ஆனால் உள்ளே உள்ளவர்கள் அனைவருடனும் பழகுவார்கள் தமது அன்றாட செயல்பாட்டினை மேற்கொள்வார்கள். அவ்வாறு ஏற்படும் போது அங்கே உள்ள அனைவருக்கும் தொற்று பரவக் கூடிய சாத்தியக்கூறு காணப்படும். இதன் காரணமாகத்தான் முடக்கல் நிலையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை.

இதற்கு தனிமைப்படுத்தலே சரியான வழியாகும். எனினும் தனிமைப்படுத்தி உள்ளோர் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47