ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக உலக முஸ்லிம் லீக்கினால் வழங்கப்பட்ட 5மில்லியன் டொலர் எங்கே?: விஜேதாச

Published By: J.G.Stephan

25 Dec, 2020 | 11:08 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிந்தளிப்பதற்காக உலக முஸ்லிம் லீக் அமைப்பினால் வழங்கப்பட்ட 5மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது என்பதை தேடிப்பார்க்கவேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2019 ஜூலை மாதம் உலக முஸ்லிம் லீக் அமைப்பின் சமாதான சம்மேளனம் மாநாடு கொழும்பு தாமரைத் தடாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டிருந்த உலக முஸ்லிம் லீக் அமைப்பின் செயலாளர் கலாநிதி ஷேக் மொஹமட் பின் அப்துல் கரீம் அல் ஈஸா வினால் 5மில்லியன் ரூபா கொடையாக வழங்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படிருந்தது. 

குறித்த நன்கொடையானது, ஈஸ்டர் தாக்குதலில் மரணித்தவர்களின் உறவினர்களுக்கு மற்றும் தாக்குதலில் காயமடைந்து அங்கவீனமுற்றிருப்பவர்களுக்கு வழங்குவதற்காக வழங்கப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ், முன்னாள், ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

என்றாலும் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 92 கோடி ரூபா ஈஸ்டர் தாக்குதலில் மரணித்தவர்களின் உறவினர்களுக்கு  மற்றும் தாக்குதலில் காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களின் நலநோம்புகளுக்காக கிடைக்கப்பெறவில்லை. அதனால் உலக முஸ்லிம் லீக் அமைப்பினால் நன்கொடையாக வழங்கப்பட்ட குறித்த நிதிக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளவேண்டி இருக்கின்றது. அதுதொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தவேண்டும்.

அத்துடன் இந்த கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காதினல் மெல்கம் ரன்சித் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31